ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தின் விலகல் காரணமான உத்தேச பொருளாதாரச் சரிவிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆசிய நாடுகளின் உறவை வலுப்படுத்த இலங்கை தீர்மானித்துள்ளது.
இதன் ஒருகட்டமாக இந்தியாவுடனான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார (எட்கா) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவுபடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதற்காக சர்வதேச வர்த்தக விவகாரங்கள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இரண்டொரு தினங்களுக்குள் இந்தியாவுக்கு விஜயம் செய்து இருதரப்புக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைக்கு சீனாவில் விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அங்கிருந்தே நேராக இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அவருக்குத் துணையாக பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் எம். பாஸ்கரலிங்கம் தலைமையிலான குழுவொன்று இலங்கையிலிருந்து இந்தியா புறப்பட்டுச் செல்லவுள்ளது.