பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைப்பது! மாகாண சபையில் முரண்பாடு!

240

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைக்கப்பட வேண்டும் என இருவேறு நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற

உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என சர்ச்சைகள் உருவாகியிருக்கும் நிலையில், ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? என உறுப்பினர்களின் கருத்தறிய முதலமைச்சர் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்துள்ளார். மறுபக்கம் தாண்டிக்குளத்தில் தான் அமைக்க வேண்டும் என உறுப்பினர்களிடம் கையெழுத்துக்களை பெற மாகாணசபை அவை தலைவர் முயற்சிக்கிறார்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், கடந்த சில தினங்க ளுக்கு முன்னர் வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் அமைப்பு தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்

தலைமையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இதன்போ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? என மாகாணசபை உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளுமாறு முதலமைச்சருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பணித்திருந்தார். அதற்கமைய உறுப்பினர்களின் கருத்துக்களை அறிவதற்கான படிவங்களை நேற்றய தினமே முதலமைச்சர் பதிவு தபாலில் அனுப்பியும் இருந்தார். இதற்கிடையில் பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என வடமாகாணசபையில் அவசரமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நினைவுபடுத்தும் வகையிலும், மாகாணசபை தீர்மானத்தை மீற முடியாது என்பதாகவும், அவை தலைவர் மற்றும் தமிழ்தேசிய

கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றின் உறுபினர் ஒருவரும் இணைந்து மாகாணசபை உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொள்ளும் முயற்சியினை மேற்கொண்டிருக்கின்றனர். இதில் சில உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ள போதும் பெரும்பாலான உறுப்பினர்கள் கையொப்பமிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே எங்களிடமும் அவ்வாறான கையொப்பம் வழங்குமாறு கேட்கப்பட்டிருக்கும் நிலையில் நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றோம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதேவேளை பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைய வேண்டுமா? தாண்டிக்குளத்தில் அமைய வேண்டுமா? என முறையாக உறுப்பினர்களின் கருத்துக்களை அறிவதற்கான படிவங்களை முதலமைச்சர் சகல

உறுப்பினர்களுக்கும் நேற்றய தினம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதேவேளை மேற்படி சர்ச்சை தொடர்பாக நேற்றய தினம் காலை 10.30 மணிக்கு கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுடன் வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க இருந்த நிலையில் அது பிற்போடப்பட்டு இன்றைய தினம் காலை அந்த சந்திப்பு நடைபெற உள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE