தமிழ் சினிமாவில் பல, ‘ஹிட்’ படங்களை இயக்கியவர், சமுத்திரகனி. ஆனால், நாடோடிகள் 2 தோல்விக்கு பிறகு, படம் இயக்குவதை மூட்டை கட்டி விட்டு, முழு நேர நடிகரானார்.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில், ‘பிசி’யாக நடித்து வந்தவர், இப்போது, பொலிவுட்டிலும் கால் பதிக்க, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நேரத்தில் தன் நட்பு வட்டார நடிகர்கள், ‘அடுத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்?’ என்று சமுத்திரக்கனியை கேட்டால், ‘சினிமாவில் நடிப்பதற்கே போதிய நேரமில்லை. பல தயாரிப்பாளர்கள், ‘கால்ஷீட்’ கேட்டு, ‘கியூ’வில் நிற்கின்றனர். ‘அதனால், மீண்டும் படம் இயக்க வேண்டும் என்பதை நான் மறந்து, ரொம்ப காலம் ஆயிற்று. இனிமேல், இந்திய அளவில், ஒரு முன்னணி நடிகராக வேண்டும் என்பதை நோக்கியே, என் கலைப்பயணம் சென்று கொண்டிருக்கிறது…’ என்கிறார்.