பொலிஸாரினால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

283
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி பாராளுமன்ற நுழைவாயில் பகுதிக்கு வருகை தரவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்ற ஒளிபதிவு ஊடகவியலாளர் ஒருவருக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவித்து அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த ஒளிபதிவு ஊடகவியலாளர் அரச தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற அடையாள அட்டையை காண்பித்த போதிலும் அதனை பொருட்படுத்தாது, தனது கடமைகளுக்கு இடையூறு விளைத்ததாக குற்றஞ்சுமத்தி கைது செய்வதாக ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.

தானும் தனது கடமைகளுக்காகவே இந்த இடத்திற்கு சமூகமளித்ததாக குறித்த ஊடகவியலாளர் கூறிய போதிலும், உயர் பொலிஸ் அதிகாரி அதனை பொருட்படுத்தவில்லை.

SHARE