பொலிஸார் மற்றும் பொது மக்கள் ஆகிய இரு தரப்பும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி பொலிஸாரினால் செயற்பட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கிடையில் விரிசலடைந்திருக்கும் உறவை வலுப்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு படைக்கு பாரிய பொறுப்புக்கள் இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.