பொலிஸார் தொடர்பில் 120 முறைப்பாடுகள்

296

பொலிஸார் தொடர்பில் கிடைத்துள்ள 120 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் உரிய முறையில் செயற்படாமை, விசுவாசமாக செயற்படாமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

அத்துடன் செயலாளர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு , இலக்கம் 09ஆம் கட்டிடம், மாநாட்டு மண்டப வளாகம், கொழும்பு 07 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE