பொலிஸார் மீது நம்பிக்கையில்லை – அநுர குமார திஸாநாயக்க

264
பொலிஸார் கடந்த காலங்களில் செயற்பட்ட விதத்தை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எம்பிலிபிட்டிய பகுதியில் அண்மையில் பொலிஸாரி்ன் விசாரணை நடவடிக்கைகளின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவம் திட்டமிட்ட வகையில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாக இருக்கும் என்பதற்கு பல சாட்சியங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

மூன்றாவது மாடியிலிருந்து கண்ணாடியை உடைத்து பாய்வதற்கு குறித்த இளைஞன் ஸ்பைடர் மேன் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பொலிஸாரின் தலையீட்டின் போது பல உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த சம்பவத்தை ஒருபோதும் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்தி உண்மையை வெளிகொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பாராளுமன்றத்தில் இன்று கூறினார்.

1736106478anura5

SHARE