பொலிஸ்மா அதிபர் சட்டத்தை வளைத்துள்ளார் – நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணி

236

 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இரண்டு வழக்குகள் சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த கூறியுள்ளார்.

நாமல் கைது செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தில் பிணை பெற்றுக்கொள்ளும் நிலைமையிலேயே நாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் தற்போது நீதிமன்ற விடுமுறை காலம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

என்.ஆர். சட்ட ஆலோசனை நிறுவனம் மற்றும் கவனர்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் தொடர்பான ஒரு வழக்கை இரண்டு வழக்காக மாற்றி, அதன் அடிப்படையில் நாமலை கைது செய்துள்ளனர்.

சட்டத்தை வளைக்க போவதாக பொலிஸ் மா அதிபர் அண்மையில் கூறியிருந்தார். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் நாமல் கைது செய்யப்பட போவதாக கூறிவந்தனர்.

சட்டம் இவ்விதமாக செயற்படுத்துவது தொடர்பில் சிக்கல் இருப்பதாகவும் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE