பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்குப் பதிலாக மக்கள் தொடர்புப் பிரிவு மீள் ஆரம்பம்

578

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியை இரத்துச் செய்து அதற்கு பதிலாக மக்கள் தொடர்புப் பிரிவை மீள் அறிமுகம் செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்த நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் வகையில், பாதுகாப்பு பிரிவுகளுக்குள் ஊடகத் தொடர்பு பிரிவு மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்த பதவியேற்றுக் கொண்டவுடன் பொலிஸ் ஊடகப் பிரிவை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தார். கடைசியாக கிடைத்துள்ள தகவல்களின் படி இனி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி யாருக்கும் வழங்கப்படப் போவதில்லை என்று தெரியவந்துள்ளது.

அதற்குப் பதிலாக முன்பு பொலிஸ் திணைக்களத்தில் இயங்கிய மக்கள் தொடர்புப் பிரிவை மீண்டும் இயங்க வைப்பதற்கும், ஊடகங்களுக்கான தகவல்களை மக்கள் தொடர்புப் பிரிவின் ஊடாக அறிக்கை வடிவில் மாத்திரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முக்கியமான விடயங்களின் போது பொலிஸ்மா அதிபர் அல்லது முக்கிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கவும் பொலிஸ் திணைக்களம் முடிவெடுத்துள்ளது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

SHARE