பொலிஸ் ஊடக பிரிவு மூடப்பட்டமைக்கான பிரதான காரணம் என்ன?

258

பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டமைக்கான பிரதான காரணம் என்ன என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

download

பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர உத்தியோகபூர்வ கடமைக்கு அப்பால் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் அடிப்படையில், பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமைய முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தொடர்பில் திணைக்கள மட்டத்தில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, பொலிஸ் மா அதிபரிடம் அறிவித்துள்ளது.

அந்த ஒழுக்காற்று விசாரணை அறிக்கையை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் ஒப்படைக்குமாறும், முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர், ஊடகம் தொடர்பிலான எந்த ஒரு கடமைகளிலும் ஈடுபடக்கூடாதென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எப்படியிருப்பினும், புதிய ஒழுக்கவியல் அடிப்படையின் கீழ் பொலிஸ் ஊடக பிரிவு முழுமையான மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் நிறுவப்படவுள்ளது.

எம்பிலியபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸார் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் பின்னர் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் ருவண் குணசேகர கருத்து வெளியிட்டார்.

அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியமையை தொடர்ந்து ஊடகங்களுக்கு செவ்வி வழங்க வேண்டாம் என குணசேகரவுக்கு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் கடந்த மார்ச் மாதம் சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அவசியமாக இருந்த சில சந்தேக நபர்கள் இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டிருந்தமையே பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டமைக்கு முக்கிய காரணம் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

SHARE