மலையக இளைஞர் யுவதிகளுக்கு இயற்கை அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டல் தொடர்பிலான விசேட பயிற்சி செயலமர்வு நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. பொலிஸ் திணைக்களத்தின் உயிர் பாதுகாப்பு பிரிவின் ஏற்பாட்டில் இப் பயிற்சி செயலமர்வு 15.08.2016 அன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமால் அபேசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் நீரில் மூழ்கிய நபரை காப்பாற்றுதல், தீ விபத்தின் போது பாதுகாப்பாக அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டல், இயற்கை அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் மலையகத்தில் கடந்த கலங்களில் நீரில் மூழ்கியும், இயற்கை அனர்த்தத்திலும் தீ விபத்தில் அதிக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையிலே மலையக இளைஞர் யுவதிகளுக்கான உயிர் பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தொடர்ச்சியாக மலையகம் தழுவிய ரீதியில் மேற்படி பயிற்சிநெறி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அடுத்தகட்டமாக கள பயிற்சி முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். முதல்கட்ட பயிற்சி செயலமர்வு நிகழ்வில் நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்