பொலிஸ் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து

104

 

முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனம் ஒன்று ஒட்டி சுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(11.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை
முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற பொலிஸ் வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் நோக்கி பயணிக்கும் பொழுது தச்சடம்பன் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி புரண்டுள்ளது.

இதன்போது வாகன சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE