சமீபத்தில் மும்பை-குஜராத் மோதிய ஐபிஎல் போட்டியின் போது பிராவோ,பொல்லார் உடன் மோதினார்.
இதனையெடுத்து பிராவோ ஐபிஎல் நன்னடத்தை விதியை மீறியதாகவும், இதனால் போட்டியின் சம்பளத்தில் இருந்த 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பிராவோ தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
களத்திலும், களத்திற்கு வெளியிலும் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள், வேடிக்கைகாக செய்தது ஒரு வழக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Calm down everybody. @KieronPollard55 and I are best friends on and off the field. Pity that normal banter is being shaped to suit agendas.
கடந்த சனிக்கிழமை கான்பூரில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் லயனஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் குஜராத் லயனஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில்,முதலில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மும்பை அணியில் ஜோஸ் பட்லர் 33 ஒட்டங்கள் எடுத்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த போது 14வது ஓவரில் அவரது விக்கெட்டை பிராவோ வீழ்த்தினார்.
இதையடுத்து பொல்லார்ட் களம் இறங்கினார். அந்த ஓவரின் கடைசி பந்தை பொல்லார்ட் ஸ்ட்ரோக் வைக்க பந்து நேராக பிராவோவிடம் வந்தது.
பந்தை எடுத்த பிராவோ நேராக பொல்லார்டை நோக்கிச் சென்றார். அப்போது பொல்லார்ட் பிராவோவை அடிக்கும் விதமாக துடுப்பாட்டமட்டையை தூக்கி தயாராக வைத்திருந்தார்.அதேவேளையில் பொல்லார்டுடன் நெஞ்சுக்கு நேர் மோதினார்.
இது ஐபில் நன்னடத்தை விதியை மீறியதாக தெரியவந்தது. இதனால் போட்டியின் சம்பளத்தில் இருந்த 50 சதவீதம் அபராதமாக பிராவோவிற்கு விதிக்கப்பட்டுள்ளது.