போக்குவரத்துத் துறையில் புரட்சிகர மாற்றங்கள்!

139

போக்குவரத்துத் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக பேரூந்துகளில் பயணிப்போரின் நலன் கருதி ஸ்மார்ட் கட்டண அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் மூலம் சில்லறைத் தட்டுப்பாடு, பயணிகளின் மிகுதிப் பணம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த முறையின் கீழ் முறையான லாபமீட்டிக் கொள்ள முடியும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ,இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நவீன வசதிகள் கொண்ட 1000 சொகுசுப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இவற்றில் தானியங்கி இயந்திரம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

அத்துடன் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த 600 ரயில் பெட்டிகள் மற்றும் 12 ரயில் எஞ்சின்களைக் கொள்வனவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

SHARE