போட்டோ கொப்பி இயத்திரம் வழங்கி வைப்பு

527

வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம்
யாழ். வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு
ரூபா ஒரு இலட்சத்துக்கு போட்டோ கொப்பி இயத்திரம் கொள்வனவு செய்து வேலணை பிரதேச சபை உறுப்பினர்களூடாக வழங்கி வைப்பு.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் யாழ். வேலணை செட்டிபுலம் தமிழ் கலவன் பாடசாலைக்கு ரூபா ஒரு இலட்சத்திற்கு (100,000.00) போட்டோ கொப்பி இயத்திரம் கொள்வனவு செய்து, 12.07.2018 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேலணை பிரதேசசபை உறுப்பினர்களான செ. பார்த்தீபன், சி. அசோக்குமார் ஆகியோர்களூடாக வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் தீவக வலய கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் திரு. ஜெயரூபன் மற்றும் பாடசாலை அதிபர் திருமதி புஸ்பநேசா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் சில பதிவுகளை படங்களில் காணலாம்.

SHARE