ஒரு தொகை கேரள கஞ்சாவினை விநியோகித்துக்கொண்டிருந்த தந்தையும், மகனும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை பிரதேசத்தில் வைத்தே இவர்களை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
49 வயதான தந்தையும், 22 வயதான மகனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகன் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வசூலிப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டே, குறித்த கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்திருப்பதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.