வவுனியா பகுதியில் தாய் மற்றும் இரட்டை மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் கொள்வனவு செய்ய வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இரு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும், இந்த மோசடியில் முக்கிய கடத்தல்காரரான இவர்களின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 மணி நேரமும் வியாபாரம்
குறித்த கைது நடவடிக்கையானது, அவர்கள் நடத்தி வந்த டயர் கடையொன்றில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த 24 மணி நேரமும் திறந்திருக்கும் டயர் கடையில் இருந்து போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.