போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கமைய தம்பதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரித்தி மத்மன் சுரசேனவினால் இன்று இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனோகா ஷியாமலி மற்றும் ஜேகோப் ரிச்சர்ட் விக்டர் என்ற பெயருடைய தம்பதியினருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பொரளை மகஸின் பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோர் என தெரிவிக்கப்படுகின்றது.