நுரைச்சோலை பிரதேசத்தில் நண்பர்களுடன் இணைந்து ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், நுரைச்சோலை, ஆலங்குடா பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் ஆட்கள் சிலர் மறைந்து கொண்டு போதைப் பொருளை பயன்படுத்தியதைக் கண்ட பிரதேசவாசிகள் அது குறித்து அப்பகுதி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், ஏழு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் தன்னை ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்
அதனையடுத்து, அவரிடமிருந்து 1,200 மில்லிகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒருவர் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், ஏனையவர்கள் அப்பிரதேச இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.