மெகசின் சிறைச்சாலைக்குள் இருந்து பெண்ணொருவர் மேற்கொண்டு வரும் போதைப் பொருள் வர்த்தகத்தின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெகசின் சிறைச்சாலையை அண்டிய சர்பண்டைன் மாவத்தையில் சந்தேக நபருக்குச் சொந்தமான வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசியத் தகவல்
சிறைச்சாலையில் இருக்கும் பெண் வழங்கும் தகவலுக்கு ஏற்ப போதைப்பொருளை பெற்றுக் கொள்வது, அதனை அவிசாவளை,கடுவலை பிரதேசங்களில் விநியோகம் செய்தல் போன்ற செயற்பாடுகளை சந்தேக நபர் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, 18 கிராம், 768 மில்லிகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.