யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகம் நீதிமன்ற வீதியில் நேற்று(புதன்கிழமை) மாலை இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக மல்லாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த நபரை விரட்டி சென்று கைது செய்து சோதனையிட்ட போது அவரது ஆடையில் இருந்து 665 மில்லிகிராம் போதை பொருளை மீட்டுள்ளனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.