மதுபான போத்தல்கள் வழங்காததாலோ என்னவோ கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றேன், எதிர்காலத்திலும் தேர்தலின் போது மதுபானம் தான் வெற்றியாளர்களை தீர்மாணிக்குமேயானால் தொடர்ந்தும் தோல்வியை சந்திக்க தாயாராகவே உள்ளேன் என நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் இராமச்சந்திரன் தெரிவித்தார்.
போதைவஸ்த்து ஒழிப்பு விசேட வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டபோது, கல்லூரி மாணவியொருவரினால் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மதுபானத்தை வழங்கி ஏன் வாக்குகளை பெற முற்படுகின்றார்கள் என கேள்வியொழுப்பிமைக்கு பதிலளிக்கும் வகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இளைய சமூகத்தின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கும் போதை வஸ்த்து பாவணையில் இருந்து இளம் தலைமுறையினரான மாணவர்கள் ஆகிய நீங்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.
ஐனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்று வரும் போதை வஸ்த்து ஒழிப்பு வேலைத்திட்டத்தின் நான்காவது நாளாக அரசியற்பிரமுகர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் போதை வஸ்த்து ஒழிப்பு நிகழ்வு அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கார்பெக்ஸ் கல்லூரியில் 24.01.2019 அன்று காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .அதிபர் சங்கர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்லூரியின் பழையமாணவர் ஒன்றியத்தின் பொருளாலரும், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமாகிய எம்,இராமச்சந்திரன், உறுப்பினர் ஆர் .காமராஜ் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.போதைவஸ்து மற்றும் சிகரெட் பாவணை இன்று இளையோர் முதல் முதியோர் வரையென வேரூன்றி இருப்பது கவலைக்குறிய விடயமே. என்னதான் நாகரிகம் அடைந்தாலும் பாரம்பரியமாக இருந்த வரும் சில தீய பழக்கங்கள் தொடர்ந்துச் செல்வது கவலைக்குறிய விடயம்.வன்முறை மிக்க குடும்ப, சமூக பிரச்சினைகளை தூண்டுவதாக போதை வஸ்த்து காரணமாக அமைந்திருப்பதை நாம் நாளாந்தம் அவதானிக்கின்றோம். இன்று சிறியவர, பெரியவர் வேறுபாடின்றி பெரும்பாலானோர் தமது ஆரோக்கியமான வாழ்கையையும், இன்பமான தருணங்களையும் மறந்து கடனாளியாகவும் நோயாளியாகவும் அலைந்து திரிகின்றனர். இவ்வாறான தொடர் செயற்பாடுகள் தமது எதிர்கால சந்ததியினரையும் தவறான வழிகே இட்டுச் செல்லும்.இதன் பாவணையால் குடற்புண்கள், இரத்தவாந்தி, இரத்தவயிற்றுப்போக்கு, சதை அழற்சி என்பன ஏற்படுவதுடன் நச்சுப்பதார்தங்களின் சேர்க்கையால் உடலில் பல தொகுதிகளில் அல்லது உடலுறுப்புக்களில் புற்றுநோயைத் தோற்றுவிக்கலாம்.இன்றைய தலைமுறையினர் இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் இதனை ஒரு கலாச்சாரமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதனால் குடும்பத்தில் வன்முறைகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள், குடும்பத்தில் நிம்மதியின்மை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் தொல்லை, தற்கொலை, கொலை முயற்சி, பிள்ளைகளின் பராமரிப்பு பிரச்சனைகள், விபத்துக்கள் என எண்ணிலடங்கா பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பவர்களாகவே இருக்கின்றனர்.குடிப்பதால் உடலுக்கு சக்தியும் தெம்பும் உற்சாகமும் நல்ல தூக்கமும் கிடைக்கின்றது என நினைக்கிறார்கள். நிச்சயமாக இல்லை. குடிப்பழக்கத்தால் உடல் சக்தி குன்றி, உடல் உறுப்புக்கள் பழுதடைந்து குடி நோயாளி ஆகின்றோம். குடியில் மயக்கம் மட்டுமே ஏற்படும் அது தூக்கமல்ல. மூளையில் ஏற்படும் சிந்தனை குறைவு ஏற்பட்டு சமநிலை குறைவுமான தன்மையும் ஏற்படும்.உலகளாவிய ரீதியில் பரவி வரும் போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் 1987ம் ஆண்டு ஆனி 26ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் பாவணையின் பலன்கள் பல நோய்கள் எற்படுகின்றது. ஆகவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இறுக்கமான முடிவுகளை ஏற்படுத்த வேண்டும் .– வீதி பாடகங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் முலம் விழிப்புணர்வை ஏற்படுத்தல். மது பாவனையை குறைக்க முற்படும் திணைக்களங்களங்கள் இதன் பாவணையைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் தெரிவித்தார். நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர் ராம் கல்லூரி வாசிகசாலைக்கு ஒரு தொகைபுத்தகங்களை நன்கொடையாக வழங்கிவைத்தார்.

