
`மக்கள் பிரதிநிதியாக நமக்கு என்ன தேவை என்பதை கேட்கவே பெங்களூரு செல்கிறேன். மக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கிறேன், நானாக எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் எனது கருத்து.
தூத்துக்குடி விவகாரத்தில் சமூகவிரோதிகள் ஈடுபட்டதாக ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு பதிலளித்த கமல், தூத்துக்குடியில் பலியானவர்கள் யாரும் சமூக விரோதிகள் கிடையாது. அவர்களை சமூக விரோதிகள் என்று கூறினால், நானும் சமூக விரோதிதான். ரஜினிகாந்த் கூறியது அவர் கருத்து. அவர் கருத்து வேறு. எனது கருத்து வேறு. போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது.
தமிழகத்திற்கு பெரிய, பெரிய ஆலைகள் வர வேண்டும், ஆனால் இந்த மண்ணின் சட்டத்தை மதிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை பேராசையினால் பல தவறுகளை செய்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு, எப்பவும் தள்ளி நின்று வாழ்த்து சொல்லும் ரசிகன் நான் பலமுறை பிறந்தநாள் முடிந்த பிறகு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்’என கூறி உள்ளார்.