(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)
தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வு கோரிய தொழிலாளர்களின் தொடர் போராட்டத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் பூரண ஆதரவை வழங்கும் எனவும் தொழிலாளர்கள் உழைப்பை அடகுவைத்து நடத்தப்படும் கூட்டொப்பந்த அரசியல் நாடகத்தை இனியும் நடத்த அனுமதிக்க முடியாது என நோர்வூட பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைவருமாகிய பா.சிவணேசன் தெரிவித்தார்.
காசல்ரி பிரதேச இளைஞர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
1992 ம் ஆண்டு முதல் தொழிலாளர் அடிமை சாசனமான கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது ,
அன்றுமுதல் 25 வருட காலமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பு பெருந்தோட்ட கம்பனிகளினால் உரிஞ்சப்டுவதுடன் அதற்கு கூட்டொப்பந்த தொழிற்சங்கங்களும் துணை போயுள்ளமை தொழிலாளர் சமூகத்திற்கு செய்த துரோகமாகும். 25 வருட காலப்பகுதியில் அடிப்படை சம்பளமாக 530 ரூபாய் வழங்கப்டுகின்றது.
இது தற்போதைய வாழ்க்கை செலவிற்கு ஏற்புடைய தொகையல்ல. தொடர்ந்து ஏமாற்றப்பட்ட சமூகமாக பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கத்தை எண்ணியிருந்தால் அதன் பின் விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை, தமது உழைப்பிற்கேற்ப ஊதியம் வழங்கக்கோரி மலையகம் தழுவி போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இப் போராட்டத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.