போராட்ட வடிவம் மாறலாம். ஆனால் போராட்டத்தின் நோக்கம் என்றைக்கும் மாறாது.

182

 

போராட்ட வடிவம் மாறலாம். ஆனால் போராட்டத்தின் நோக்கம் என்றைக்கும் மாறாது.
கில்மிசாவினுடைய வெற்றியும் ஒரு போராட்டத்தின் தடமாகத்தான் பார்க்கப்பட்டது. அதனால்தான் இத்தனை கொண்டாட்டங்களும் ஆதரவும் அவருக்கு கிடைத்தது. பிள்ளை திறமையானவள். ஆனால் அந்த மேடையை திறமைக்கான களமாக மட்டும் பயன்படுத்தவில்லை. எமக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவும் அவள் அந்த மேடையை பயன்படுத்தியிருக்கிறாள் என்பதே அவளின் வெற்றியை இனத்தின் வெற்றியாக கொண்டாடியவர்களது எண்ணப்பாடாக இருந்தது. அவளின் வெற்றி கனதியானது. அதை சாதாரணமாக கடந்து போக முடியாது.
இது தவிர்க்கமுடியாதது என கூறிக்கொள்பவர்களுக்கு,
அவளுடைய வெற்றி அவளது திறமைக்கானது . அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒட்டுமொத்த உலகத்தமிழினமும் கில்மிசாவை கொண்டாடியது இந்த சிறு வயதில் அவள் தமிழினத்தின் வடுக்களை தன் இசையால் மீண்டும் ஒருமுறை உலகறியச்செய்தவள். அவளை சாதாரண குழந்தையாக பார்க்க முடியவில்லை.
அவளை அந்த மேடையில் அப்படியொரு விம்பமாகத்தான் அவளை சுற்றியிருப்போரும் காண்பித்து வந்தார்கள்.
இன்று திடீரென அத்தனை எதிர்பார்ப்புக்களையும் ஒரு செல்பி புகைப்படம் சுக்குநூறாக்கி விடுவதை எங்கனம் சாதாரணமாக கடந்து போகச்செல்கிறீர்கள்?
நீங்கள் கூறும் காரண காரியங்களைப்பார்த்தால் இங்கு தங்கள் நலன் சார்ந்து யார்வேண்டுமானாலும் போராட்ட வடுக்களையும் வலிகளையும் தேவைப்படும் போது கையிலெடுக்கலாம். தேவையே இல்லை என்கின்ற போது தூக்கி வீசலாம்?
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இன்று நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் எங்களை நம்பித்தான் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
வெற்றியை மறவர்களுக்கு சமர்ப்பித்த அட்மின் அவர்களே,
மறவர்களின் கனவில் மண்ணள்ளிப்போட்டவர்களுடன் வெற்றிக்கொண்டாட்டத்தை சமர்ப்பிப்பதாக எடுத்துக்கொள்வதா?
SHARE