போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா வீடுகளை வழங்கியுள்ளது – துணைத்தூதர் நடராஜன்

290
இந்தியாவில் வீடில்லாமல் பல மக்கள் இருக்கும் நிலையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது என இந்திய துணைத்தூதர் ஆறு.நடராஜன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஓமந்தை, மகிழங்குளம் கிராம அலுவலர் பிரிவில் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட 120 வீடுகளை பயனாளிகளிடம் இந்திய துணைத்தூதர் கையளித்தார்.

இதன்போது உரையாறறுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நீங்கள் எல்லோரும் எம் உறவுகள் என்று கூறுவதையே நான் விரும்புகிறேன்.

போருக்கு பின் இலங்கைக்கு பல நாடுகள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குக்கு உதவி செய்து வருகின்றன.

குறிப்பாக இந்தியா வடக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் வீடில்லாமல் பல மக்கள் இருக்கும் நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா வீடுகளை வழங்கியுள்ளது.

உலகத்திலே ஒரு நாடு அந்நிய நாட்டிற்கு வீடுகளை கட்டிகொடுக்க முன் வந்தது என்றால் அதற்கான காரணம் உங்களை உறவுகளாக நினைத்தது தான்.

அதேபோல் பொருளாதார வளர்ச்சிக்கான கல்வி மற்றும் கலை வளர்ச்சிக்கான உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபாசுதன், உதவி அரச அதிபர் எஸ்.கமலதாசன், பிரதேச செயலாளர் கா.உதயராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

SHARE