போரினால் காணிகளை இழந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ நாணயக்கார

271
Vasudeva-720x480
போர் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுககையில்,

காணிகளை இழந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும்.

எனினும், போரின் போது வேறும் நபர்கள் குறித்த காணியில் குடியேறியிருந்தால் அவர்களிடமிருந்து காணிகளை மீளப்பெற்றுக் கொள்வது சரியானதல்ல.

ஏனெனில், அந்தக் காணியில் தற்போது வசிப்பவர் இருக்கும் நிலைமையை கருத்திற்கொள்ள வேண்டும்.

பணம் படைத்தவர்கள், ஏழைகளை காணிகளிலிருந்து விரட்டியடிக்க முயற்சித்தால் அதனை அனுமதிக்க முடியாது எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

SHARE