போரில் கணவனை இழந்த பெண்கள் வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்..!

386

 

இலங்கையின் உள்நாட்டு போரில் கணவனை பறிகொடுத்த பெண்கள் வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டி உள்ளன. Fisherfolk Solidarity Movement என்கிற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த கீதா லக்மினி என்பவர் போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 85,000 பெண்கள் விதவைகள் ஆகி உள்ளார்கள், மன்னாரில் மடு பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்று பாலியல் தொழிலுக்கு பிரசித்தி பெற்று விளங்குகின்றது, காரணம் இக்கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஆண்கள் யாரும் இல்லை, வேலை இல்லை, பிழைக்கின்றமைக்கு வேறு மார்க்கம் இல்லை, குழந்தைகளை வளர்க்கின்றமைக்காக பெண்கள் உடலை விற்று பாலியல் தொழில் செய்கின்றார்கள். இது மாத்திரமே அவர்களின் பிழைப்புக்கான ஒரு வழியாக இருந்து வருகின்றது, அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நஷ்டஈடு அநேக பெண்களுக்கு கிடைக்கவில்லை என்கிறார்.

– 

SHARE