போருக்காக 4 பில்லியன் டொலர் செலவிட்டாராம் மகிந்த

245

தனது அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் வெளிநாடுகளிடம் வாங்கப்பட்ட கடனில் மூன்றில் ஒரு பங்கு, போருக்காக செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

கிருலப்பனையில் நேற்று நடந்த மே நாள் பேரணியில் உரையாற்றிய அவர்,

”எனது அரசாங்கத்தின் காலத்தில் 12 பில்லியன் டொலர்கள் மட்டுமே கடனாக பெறப்பட்டது. இதில் 4 பில்லியன் டொலர் போருக்காகச் செலவிடப்பட்டது.

எஞ்சியுள்ள, 8 பில்லியன் டொலரும், அபிவிருத்திப் பணிகளுக்காகவே செலவிட்டுள்ளது. மத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியனவும் இந்த நிதியில் தான் கட்டப்பட்டன.

ஆனால் தற்போதைய அரசாங்கம், 7.43 பில்லியன் டொலர் கடனைப் பெற்றிருக்கிறது” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.rajapaksa

SHARE