போர்க்குற்றம் தொடர்பில் சாட்சியமளிக்க தயார்: சந்திரநேரு சந்திரகாந்தன்

365

 

இலங்கையின் இறுதிப்போர் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் சாட்சியமளிக்க தயாராகிறார்.

இந்தத் தகவலை இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இறுதிப்போர் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தகவல் பரிமாற்றத்தை சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளுர் விசாரணைகளின் போது தாம் சாட்சியமளிக்கவுள்ளதாக சந்திரகாந்தனை கோடிட்டு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

balakumaran_01 chandraneru-chandra final-stage-of-the-war-1

SHARE