போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் இல்லை- இலங்கை அரசாங்கம்

226

geneva-450x274

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகள் என்றவிடயம் ஆராயப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இந்த நீதிவிசாரணைகள் உள்ளக முறையிலேயே மேற்கொள்ளப்படும்.

எனினும் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் சிலரை நேற்று தமது அமைச்சில் சந்தித்த அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

இந்த முயற்சிகளுக்கு இந்தியா அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெனீவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு தெளிவுப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதற்கிடையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் எதிர்வரும் மூன்று மாதங்களில் உருவாக்கப்படும்.

SHARE