போர்டோ ரிகா தீவில் மரியா புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு..!!

227

அமெரிக்காவின் டெக்சாஸ், புளோரிடா மாகாணங்கள் மற்றும் கரீபிய கடலில் உள்ள தீவான போர்டோ ரிகாவை அண்மையில் மரியா என்னும் புயல் கடுமையாக தாக்கியது. இதில் போர்டோ ரிகாவில் மட்டும் 16 பேர் பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில் அங்கு மரியா புயலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 18 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. இது கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் என்று போர்டோ ரிகா கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம், மரியா புயலால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிட பேரிடர் நிதியாக 29 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் எல்லைக்கு உட்பட்ட, அதேநேரம் அமெரிக்காவுடன் இணைக்கப்படாத பகுதியாக திகழும் போர்டோ ரிகாவுக்கும் இந்த நிதியில் பெரும் பங்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE