போர்ட்சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு! அமைச்சர் மஹிந்த அமரவீர

279

போர்ட் சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

16-1444970253-mahinda-amaraweera234-600-720x480

மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கொழும்பு பேராயர் காதினல் மல்கம் ரஞ்சித் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது போர்ட் சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மீனவர்களின் பிரச்சினை குறித்து பேராயர் மல்கம் ரஞ்சித் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, பாதிப்புக்குள்ளான மீனவர்களின் முறைப்பாடுகள் அனைத்தையும் தான் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போர்ட் சிட்டி துறைமுக நிர்மாணப் பணிகளுக்காக மூன்று லட்சம் கியூப் கனஅடி அளவிலான மணல் கடல்படுகையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவழப்பாறைகள் சேதமடைந்துள்ளன. மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பவழப்பாறைகள் சேதமடைந்துள்ளதன் காரணமாக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

எனவே அவர்களுக்கு வேறு தொழில்களில் ஈடுபட வசதியளிக்கும் வகையில் சுமார் 50 கோடி ரூபாவை நட்டஈடாக வழங்க ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். மிக விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இது தொடர்பில் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே போர்ட்சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிப்படைந்துள்ள தெஹிவளை பிரதேச மீனவர்களுக்கும் அமைச்சர் அமரவீரவுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

SHARE