போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 801 வெற்றிகளை பெற்ற முதல் கால்பந்து வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். சவுதி புரோ லீக் தொடரின் அல் அஹ்லி சவுதி அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. Cristiano Ronaldo கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அடித்த வெற்றி கோல் அவரது 879வது கோல் ஆகும். கடைசி நிமிடங்களில் வெற்றி கோல் அடித்த ரொனால்டோ! உற்சாகத்தில் துள்ளிக் குதித்த வீடியோ கடைசி நிமிடங்களில் வெற்றி கோல் அடித்த ரொனால்டோ! உற்சாகத்தில் துள்ளிக் குதித்த வீடியோ அத்துடன் அல் நஸருக்காக அடித்த 50வது கோல் ஆகும். மேலும் இந்த வெற்றியின் மூலம் மெஸ்சியின் இமாலய சாதனையை ரொனால்டோ முறியடித்தார். அதாவது, 800 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என மெஸ்சி வலம் வந்தார். ஆனால் ரொனால்டோ 801 வெற்றிகளை பெற்றுள்ளார்.

33

 

கராச்சியில் நடந்த எலிமினேட்டர்-2 போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸல்மி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.

சைம் அயூப் – மொஹம்மது ஹாரிஸ் ருத்ர தாண்டவம்
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் மோதும் 2வது அணியை முடிவு செய்யும் எலிமினேட்டர் போட்டி நேற்று நடந்தது.

முதலில் துடுப்பாடிய பெஷாவர் ஸல்மி அணியில் பாபர் அசாம் 22 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சைம் அயூப் மற்றும் மொஹம்மது ஹாரிஸ் கூட்டணி ருத்ர தாண்டவம் ஆடியது. அரைசதம் விளாசிய சைம் அயூப் 44 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் விளாசி 73 ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து ஹாரிஸ் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் விளாசினார். கோஹ்லர் கேட்மோர் 18 (9) ஓட்டங்களும், ஆமீர் ஜமால் 17 (9) ஓட்டங்களும் எடுக்க பெஷாவர் அணி 185 ஓட்டங்கள் குவித்தது. நசீம் ஷா 3 விக்கெட்டுகளும், ஒபேட் மெக்காய் மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இஸ்லாமாபாத்தில் ஹேல்ஸ் (1), ஆகா சல்மான் (5) மற்றும் ஷதாப் கான் (0) ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

எனினும் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 21 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் அசாம் கான் 22 (17) ஓட்டங்களில் அவுட் ஆக, இஸ்லாமாபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 91 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது.

அப்போது கூட்டணி சேர்ந்த இமாத் வாசிம், ஹைதர் அலி பெஷாவர் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

ஹைதர் அலி சரவெடி
குறிப்பாக சிக்ஸர் மழை பொழிந்த ஹைதர் அலி, அதிரடியாக அரைசதம் விளாசினார். இதன்மூலம் இஸ்லாமாபாத் அணி 19 ஓவர்களில் 189 ஓட்டங்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இமாத் வாசிம் 59 (40) ஓட்டங்களும், ஹைதர் அலி 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 52 (29) ஓட்டங்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. பாபர் அசாமின் அணி வெளியேறியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கராச்சி நேஷனல் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள போட்டியில் முல்தான் சுல்தான் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

SHARE