போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நானல்ல! – மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன

178

8006340cf22378beda4fca3a71c7cd83065

போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நான் அல்ல என மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கமல் குணரட்ன போர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அண்மையில் வெளியிடப்பட்ட நூலின் ஊடாக எந்தவொரு போர் இரகசியங்களும் அம்பலப்படுத்தப்படவில்லை.

நான் போர் இரகசியங்ளை வெளியிடும் படைவீரனல்ல. போர் இரகசியங்கள் இருந்தால் அது நாம் சாகும் போது எம்முடனேயே புதைந்துவிடுமே தவிர, அவற்றை வெளியிடும் பெறுமதியற்ற மனிதனல்ல நான்.

எனது நூலில் எந்தவொரு போர் இரகசியங்களையும் வெளியிட்டதில்லை.

பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்களையே நான் நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

எனது பெருமையை பிரச்சாரம் செய்யும் நோக்கில் நூலை எழுதவில்லை.

வறிய பெற்றோரே தமது பிள்ளைகளை படையில் இணைத்தனர். அவர்கள் போர் பற்றி அறிந்து கொள்ளவே இந்த நூலை சிங்களத்தில் எழுதினேன்

நாம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தும் புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ள இந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

நான் எனது உயிர் இருக்கும் வரையில் அரசியலுக்கு வர மாட்டேன் என்பதனையே வலியுறுத்துகின்றேன என அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு நாட்களில் 5000 நூல்கள் விற்பனை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் பற்றி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதிய “ரன மக ஒஸ்ஸே நந்திக்கடால்” என்னும் நூலின் முதல் பதிப்பு 7 நாட்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.

முதல் பதிப்பில் சுமார் ஐயாயிரம் நூல்கள் பிரதியிடப்பட்டுள்ளன. இந்த அனைத்து நூல்களும் முதல் ஏழு நாட்களில் விற்றுத் தீர்ந்துள்ளதாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு புத்தகக் கண்காட்சியில் இந்த நூலின் மற்றுமொரு பதிப்பு வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட பதிப்பில் சுமார் எழாயிரம் நூல்கள் பதிப்பிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE