போலந்து பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

344
போலந்து நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லெஸ்ஸெத் செத்வெசிகா இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் போலந்து நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் போலந்து பிரதி வெளிவிவகார அமைச்சரின் பயணம் அமைந்துள்ளது.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இன்று பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வாவுடனான கலந்துரையாடலின்போது போலந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாதத்திடப்பவுள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் இரண்டு நாடுகளின் கூட்டுச் செயற்பாடு மற்றும் வரிஏய்ப்பு தொடர்பில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுதல் என்பன குறித்த் ஒப்பந்தங்களின் நோக்கம் என்றும் விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

SHARE