போலி கடவுச்சீட்டு மூலம் கனடா செல்ல முற்பட்ட நான்கு பேர் கைது

272

625.256.560.350.160.300.053.800.461.160.90

போலி கடவுச்சீட்டு மூலம் துருக்கி ஊடாக கனடா செல்ல முற்பட்ட நான்கு பேர் இன்றுகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம்,இளவாலை,முள்ளிபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும்24தொடக்கம் 33 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் இருவர் சகோதரர்கள் என்பதோடு,துருக்கிய விமான நிறுவனத்துக்குசொந்தமான டி.கே.731 விமானம் மூலம் துருக்கி சென்று அங்கிருந்து கனடா செல்லதிட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இவர்களை பரிசோதனை செய்தஅதிகாரிகள்,இவர்கள் மீது சந்தேகம் கொண்டு குற்றப் புலனாய்வு பிரிவினருக்குஅறிவித்ததையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெளிநாடுகளுக்கு இளைஞர்,யுவதிகளை சட்டவிரோதமாக அனுப்பும் வியாபாரத்தைஅடியோடு இல்லாமல் செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம்முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE