பௌத்த பிக்குகள் குறித்த சட்டத்தில் பல பாதக விடயங்கள் காணப்படுகின்றன – அதுரலிய ரத்ன தேரர்

307
பௌத்த பிக்குகள் குறித்த உத்தேச சட்டத்தில் பல பாதக விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இந்த உத்தேச சட்டத்தில் பௌத்த பிக்கு சமூகத்திற்கு பாதகமான தீங்கு ஏற்படுத்தக் கூடி பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சட்டங்கள் மிக விரிவான பேச்சுவார்த்தைகள் கலந்துரையாடல்களின் பின்னரே சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே இவ்வாறான சட்டங்களை சமர்ப்பிக்கக் கூடாது.

அவசர அவசரமாக இவ்வாறான சட்டங்களை அமுல்படுத்துவதனால் பௌத்த சாசனத்திற்கோ அல்லது பௌத்த சமூகத்திற்கோ நன்மை ஏற்படப் போவதில்லை என அதுரலிய ரத்ன தேரர், கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

athuraliye_rathana_ci-gif

SHARE