பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது, அடுத்தவர்களுக்கு நல்வாழ்வளிப்பதையே குறிக்கும்: சம்பிக்க ரணவக்க

295

வெளிநாட்டில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகளை வைத்து இலங்கை முஸ்லிம்களை அச்சமூட்ட சிலர் முயற்சிப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை சமஸ்டியாக மாற ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் வடக்கில் உள்ள தமிழர்கள், தெற்கில் சிங்களவர்களுடன் பிரிந்து வாழ நினைப்பது தவறு இதை முன்னெடுத்த பிரபாகரனால் அதை நிறைவேற்ற முடியாது போனது.

மலையக தமிழர்கள், முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வது போன்று வடக்கு தமிழர்களும் வாழ வேண்டும். அனைத்து இன மக்களும் தமது கலாசாரத்தை மதித்து வாழ சுதந்திரம் வேண்டும்.

கிறிஸ்தவ மக்கள் இந்த நாட்டில் வாழ அன்றைய சிங்கள மன்னர்கள் இடமளித்தனர். அதேபோல் முஸ்லிம் மக்களை போர்த்துக்கேயரிடம் இருந்து சிங்கள மன்னர்கள் பாதுகாத்தனர். அதனால் தான் அவர்கள் இந்த நாட்டிலே வாழ்கின்றார்கள்.

அத்தோடு சிங்களவர்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது, அடுத்தவர்களுக்கு நல்வாழ்வளிப்பதையே குறிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE