தமிழ் சினிமாவில் 90களில் எடுத்துக் கொண்டால் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். அதில் ஒரு சில பேர் தற்போதும் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், சிலர் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
சமீபத்தில் ப்ரண்ட்ஸ் படத்தில் சிறு வயது விஜய்யாக நடித்த ஜெயந்த் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் அவர் தன்னுடைய வாழ்க்கை எப்படி செல்கிறது என்பது போல் சில விஷயங்களை ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், சினிமாவில் நடிப்பதற்காக தான் நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறேன். என்னுடைய வித்தியாசமான போட்டோ ஷுட்கள் பார்த்து தற்போதைக்கு குறும்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
இதற்கு நடுவில் என் அம்மா காலமானார். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தான் என்னுடைய நண்பர் அஜய் அவர்கள் தற்போது இமைக்கா நொடிகள் படம் இயக்கி வருகிறார். அவரிடம் கேட்டு தற்போது அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார்.