சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது மகனின் கண் முன்னால் ஆழமான பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது மகன் மற்றும் தந்தையுடன் சுவிஸில் உள்ள Plateau du Couloir என்ற பகுதியில் நேற்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளார்.
அதிகாலையில் சென்ற அவர்கள் மூவரும் உற்சாகமாக விளையாடி விட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு கீழே இறங்கியுள்ளனர்.
சுமார் 3,500 அடி உயரத்தில் மூவரும் வந்துக்கொண்டு இருந்தபோது, 52 வயதான நபரின் பனிச்சறுக்கு சாதனத்தில் இருந்து ஒரு கம்பி கீழே விழுந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அந்த கம்பியை எடுப்பதற்காக திரும்ப அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, திடீரென பனிக்கட்டிகள் உடைந்ததால் அருகில் இருந்த அதாள பாதாளத்தில் விழுந்துள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் ஹெலிகொப்டர் மற்றும் மருத்துவர்களுடன் அங்கு சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 200 அடி உயரத்தில் இருந்து விழுந்த அவர் பலத்த காயங்களுடன் அவர் அதே இடத்திலேயே பலியானார்.
மகனின் கண் முன்னால் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது