நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தனிப்பட்ட வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று இரவு பொலிஸ் குழுவொன்றினால், ஹோகந்தர, மங்கள மாவத்தையில் அமைந்துள்ள வீரவன்சவின் வீட்டில் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாரினால் விமலின் மனைவி சஷி வீரவன்சவிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞன் விமல் வீரவன்சவின் மகனின் நண்பர் என சஷி வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு அந்த இளைஞர் அந்த வீட்டில் இருந்தார் எனவும், அவர் காலை நித்திரையில் இருந்து எழும்பவில்லை எனவும் மேல் மாடியில் இருந்தவர்கள் தன்னிடம் அறிவித்ததாகவும் சஷி வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் உயிரிழந்த இளைஞரின் தாயார் மரணம் தொடர்பில் தனக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இளைஞன் சிறந்த உடல் நிலையில் இருந்தார் எனவும், பிரேத பரிசோதனை அறிக்கை மேற்கொள்ளும் வரையில் காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.