மகனுடன் சேர்ந்து தீபாவளி வாழ்த்து கூறிய பிரபு தேவா.. ஆச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே

111

 

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் பிரபு தேவா. இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என இவருக்கு பன்முக திறமை உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இவர் தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் பிரமாண்டமான பாடல் காட்சி ஒன்றில் விஜய், பிரபு தேவா இணைந்து நடனமாடியுள்ளனர் என தகவல் வெளியானது.

தீபாவளி வாழ்த்து
இதை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் இருகிறார்கள். இன்று தீபாவளி என்பதால் நட்சத்திரங்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் பிரபு தேவா தனது மகனுடன் இணைந்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பிரபு தேவாவின் மகனை பார்த்த ரசிகர்கள் பலரும், அச்சு அசல் பிரபு தேவா போலவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள்.

SHARE