மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை

263

ஜப்பானில் பள்ளிக்கான நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானை சேர்ந்தவர் Kengo Satake(48), இவரது மகன் Ryota (12). Kengo Satake அங்குள்ள பிரபல தனியார் பள்ளியில் தனது மகனை சேர்ப்பதற்காக சென்றுள்ளார்.

இப்பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றால் நுழைவு தேர்வு வைக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக அவர் சிறுவனுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார்.

ஆனால் அத்தேர்வில் சிறுவன் தேர்ச்சி அடையாததால், வீட்டிற்கு சென்ற அவரது தந்தை ஆத்திரத்தில், வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவனின் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார்.

அதன் பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

SHARE