மகன் செலுத்திய பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு தந்தை பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊட்டுவள்ளி ஐம்பது ஏக்கர் பகுதியிலே 27.02.2017 அன்று மாலை 5.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போடைஸ் அட்டன் பகுதியில் சேவையில் ஈடுபடும் குறித்த தனியார் பஸ் சேவை நிறைவடைந்த பின் பஸ் சாரதியினால் தனது வீட்டுக்கருகில் பஸ்ஸை நிறுத்த முற்பட்டபோது சாரதியின் தந்தை பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்டு ஸ்தலத்திலே பலியானார்.
பஸ்ஸை பின்னோக்கி செலுத்த முற்பட்டபோது பஸ்ஸின் நடத்துனர் அவ்விடத்தில் இல்லையெனத் தெரிய வருகின்றது.
65 வயதுடைய ஆறுமுகம் மாரியப்பன் என்பவரே இவ்வாறு பரிதாபமாக மரணமானார்
சாரதியை அக்கரப்பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்