மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில், வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்கதேச அணிகள் மோதின.
முதலில் ஆடிய வங்கதேச மகளிர் அணி, இங்கிலாந்து வீராங்கனைகளின் அபார பந்துவீச்சினால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை அயஷா ரஹ்மான் அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிரிஸ்டி கோர்டோன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் பின்னர் மழை பெய்ததால், இங்கிலாந்து அணிக்கு 16 ஓவர்களில் 64 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 9.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக எமி எலன் ஜோன்ஸ் 28 ஓட்டங்களும், சிவர் 23 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த வெற்றியால், இங்கிலாந்து அணி தனது பிரிவில் ஒரு வெற்றியுடன் மூன்று புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.