
மகள்களுடன் நதியா
தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு சனம், ஜனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.

இதுவரை மகள்களை வெளியுலக்குக்கு காட்டாமல் இருந்த நதியா, முதல் தடவையாக அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் அவை வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சரியத்தை பகிர்ந்து வருகிறார்கள்.