மகாராணிக்கு கூட இது கிடைக்கவில்லை முதலிடம் பிடித்து அசத்திய மேகன் மெர்க்கல்… எதில்?

200

 

2018-ல் பிரித்தானியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் என்ற பெருமைக்கு சொந்தகாரராகியுள்ளார் மேகன் மெர்க்கல்.

பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் மெர்க்கல் திருமணம் இந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதிலிருந்து மெர்க்கல் குறித்த ஒவ்வொரு செய்தியும் வைரலானது.

இந்த திருமணத்தை அமெரிக்காவில் மட்டும் நேரலையில் 29.2 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

இதுவும் புதிய சாதனை தான், கடந்த அக்டோபர் மாதம் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் சுற்றுலா சென்றது என மெர்க்கலின் ஓவ்வொரு அசைவும் கவனம் பெற்றது.

இந்நிலையிலேயே 2018-ல் பிரித்தானியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் என்ற பெருமையை மெர்க்கல் பெற்றுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் அடிக்கடி சர்ச்சையிலும் மெர்க்கல் சிக்கினார். இது எல்லாம் சேர்ந்து மெர்க்கலை அதிகம் பேரால் கூகுளில் தேட வைத்துள்ளது.

இதன்மூலம் டிரண்டிங்கில் முதலிடத்தில் உள்ள இளவரசி என்ற பட்டம் மெர்க்கலுக்கு கிடைத்துள்ளது.

SHARE