மகாராணி எலிசபத் எடுத்த முடிவு

260

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் மசோதாவுக்கு பிரித்தானியா மகாராணி எலிசபத் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு கடந்தாண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று வாக்களித்தனர்.

இதனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக முடிவு செய்தது. இதற்கு அப்போதைய பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக, புதிய பிரதமராக தெரசா மே தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் பெறுவதற்கான சட்ட மசோதா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக 335 எம்.பி.க்களும், ஆதரவாக 287 எம்.பி.க்களும் வாக்களித்திருந்தனர்.

இதனால் பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் மசோதாவுக்கு, பிரித்தானிய நாடளுமன்றம் கடந்த 14 ஆம் திகதி ஒப்புதல் அளித்தது. அதன் பின் இந்த மசோத பிரித்தானிய மகாராணி எலிசபத்திடம் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

ராணி எலிசபத் இந்த மசோதாவுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். இதனைத்தொடர்ந்து, பிரெக்ஸிட் மசோதா முழு சட்ட வடிவம் பெற உள்ளது என்று கூறப்படுகிறது.

SHARE