மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி-அன்று மகிந்தவை புகழ்ந்த சந்திரிக்கா இன்று மைத்திரியுடன்

354
மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி: முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன என்பவர் ஜனநாயக தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரிபால சிறிசேன, எதிரான கொள்கைகளை கொண்டவர்களை வீதியில் கொலை செய்யாதவர்.

ஏனைய நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் கேட்கக்கூடிய பொறுமை காக்கக் கூடிய தலைவர்.

இந்த போராட்டத்தில் பிரதான கட்சிகள் இணைந்துள்ளன. அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அதிகளவில் உள்ளனர். மேலும் பலர் வரவுள்ளனர்.

மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் பயணத்தை இன்று தொடங்கியுள்ளோம். என்றும் இல்லாத வகையில் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இந்த பயணத்தில் இணைந்துள்ளன.

பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் இப்படியான கொடூர, ஊழல், மோசடி நிறைந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. நாங்கள் ஒன்பது வருடங்கள் பொறுத்தோம்.

பொறுத்தது போதும் என்று மக்கள் எண்ணி விட்டனர். மைத்திரிபால சிறிசேன என்பவர் ஊழல், மோசடிகளை செய்யும் நபர் கிடையாது.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் நபர். விமர்சிப்பவர்களை பட்டப்பகலில் நடுவீதியில் கொலை செய்ய மாட்டார்.

கொள்கையை மதிக்கும் தலைவர் எனவும் சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 

SHARE